text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. | 7 |
கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும். | 4 |
இலக்கியம் கதை காமிக்ஸ் கோயாவி சாகசம் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம் | 16 |
. | 1 |
எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் ஆசிரியர். | 5 |
இணையம் கற்றல் கற்பித்தலிலும் மிகப்பெரிய உருமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. | 6 |
மரபு வழிசார்ந்த கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள் குடியிருந்த வகுப்பறைகளில் தற்போது நவீனமான அணுகுமுறைகள் இடம் பிடித்துள்ளன. | 12 |
இணையம் வழியான கல்வி முறை ஆசிரியர்களின் கற்பித்தலிலும் மாணவர்களின் கற்றலிலும் புதிய வகைப் பரிணாமங்களை உண்டாக்கிக் கொடுத்திருக்கின்றன. | 13 |
எளிமை விரைவு விரிவு விளைபயன் ஈர்ப்பு மனமகிழ்வு பல்லூடகம் முதலான தன்மைகளைக் கொண்டிருப்பதால் இணையம் வழியான கல்விமுறை இன்றைய காலத்திற்கு மிகவும் ஏற்றதாகவும் தவிர்க்க இயலாத ஒன்றாகவும் ஆகிவிட்டது. | 21 |
அவ்வகையில் தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்குப் பங்களிக்கும் இணைய ஏந்துகள் குறித்து பார்ப்போம். | 9 |
மாறிவரும் உலகில் நாள்தோறும் ஏற்படும் மாற்றங்களில் அனைத்தும் அண்மையாய் உணர வைக்கிறது. | 9 |
வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் தகவல் நுட்பங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையை மாற்றியமைத்து வருகின்றன. | 11 |
இந்த மாற்றங்களைத் தமிழ்மொழிக் கற்பித்லுக்கு எவ்வாறு உட்படுத்திக்கொள்ளலாம் என்பதைப் பற்றிய எனது கருத்துக்களை இக்கட்டுரை மூலம் விளக்க விரும்புகிறேன். | 14 |
மொழிப்பாடம் கற்பது எளிதானதன்று. | 3 |
ஆனால் அதனை எளிதாகக் கற்கும் வகையில் ஆர்வத்தைத் தூண்டிப் பாடப்பொருள்களை பாடக்கருத்துக்களை நினைவில் கொள்ளும் வகையில் இணையத்தில் உருவாக்கிட முடியும். | 15 |
தமிழ்க் கல்வியை தமிழ் மொழிக் கல்வியை அரிச்சுவடி முதல் ஆராய்ச்சிப் படிப்புவரை வழங்கிட பல்லூடகத்தின் வழியே அசைவுப் படங்களுடன் அமைக்கப்படுவதால் கேட்டல் பேசுதல் படித்தல் எழுதுதல் என்ற அடிப்படை மொழித்திறனை எளிதாகப் பெறமுடியும். | 24 |
காரணம் கற்றல்கற்பித்தலுக்கான பாடங்கள் பல்லூடக வசதிகளால் அச்சு வடிவம் ஒலி வடிவம் ஒளி வடிவம் மூலமாக ஆர்வத்துடன் எளிய இனிய முறையில் கற்றுக்கொள்வர். | 17 |
இவைபோன்றே உயர்கல்விப் பாடத்திட்டத்தின் மூலம் தாய்மொழி பண்பாடு வரலாறு கலைகள் உள்ளிட்ட வாழ்வியல் கூறுகளையும் கோட்பாடுகளையும் அறிமுக நிலையிலிருந்து ஆராய்ச்சிநிலை வரையில் பல்வேறு பிரிவுகளில் பாடத்தினை வடிவமைத்திடலாம். | 20 |
இப்பாடங்களில் ஏற்படும் ஐயங்களைப் போக்கிக்கொள்ள பாட ஆசிரியர்களுக்குரிய திட்டங்களும் இணையத்தில் கொண்டு வரப்பட வேண்டும். | 11 |
தமிழ் மொழிக் கற்பித்தலில் எளிமையை உள்ளடக்கிய மாற்றங்களை உலகத் தமிழாசிரியர்கள் அறியும் வகைகளில் கற்றல்கற்பித்தலில் இணையம் என்ற தனியொரு இணையத்தை உருவாக்கிடலாம். | 16 |
இது அயல் நாடுகளில் வாழும் மொழியியல் வல்லுநர்களுக்கும் மொழியாசிரியர்களுக்கும் உதவியாக அமையும். | 9 |
வளர்ந்து வருகின்ற கணினியுலக நுட்பங்களை தமிழ்மொழியின் கற்றல் கற்பித்தலுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். | 10 |
மிக வேகமாக வளர்ந்துவரும் துறையை இன்றையச் சூழலில் தமிழ்மொழிக் கற்பித்தலுக்குரிய நுட்பங்களைப் பயிற்சிகள் மூலம் ஆசிரியர்களுக்கு தரப்பட்டு தரப்படுத்திய கற்பித்தலுக்கு தயார் செய்ய வேண்டும். | 18 |
இதன்மூலம் இணையத்தின் அனைத்து வசதிகளையும் தமிழுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம். | 9 |
தமிழ்க் கற்றல்கற்பித்தலைப் பொறுத்த வரையில் உலகளாவிய ஒரு முயற்சியாக அல்லது திட்டமாக இன்னும் வரவுமில்லை வளரவுமில்லை. | 12 |
புலம் பெயர்ந்த தமிழர்களை இணைக்கும் வகையிலும் தமிழ்மொழியை உலகளாவிய முறையில் கற்கவும் கற்பிக்கவும் எந்தெந்த உத்திகளைப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் தமிழறிஞர்களும் மொழியியல் வல்லுநர்களும் ஆசிரியர்களும் கலந்தாய்ந்து ஒரு அமைப்பினை உருவாக்கி எந்த நிலையில் கற்க விரும்புகிறார்கள்? | 27 |
அதற்கான பாடங்கள் எப்படி அமைய வேண்டும்? | 5 |
என்பதைக் கலைத்திட்ட வடிவமைப்பின் போது கவனத்தில் கொள்ளவேண்டும். | 6 |
கல்வித் திட்டத்தில் இணையவழிக் கல்வியை மாணவர்களுக்கு அளிப்பதால் அவர்களது சிந்தனையாற்றல் வளர்ச்சியடைந்து மாறிவரும் தொழில்நுட்பத்திற்குத் தங்களை வலுப்படுத்திக் கொள்ள முடிகிறது. | 15 |
இதற்கு என்று சொல்லப்படும் தொழில்நுட்பத்தைக் கற்றல்கற்பித்தலில் நடைமுறைப்படுத்திட வேண்டியது காலத்தின் தேவை. | 9 |
கல்வியியல் வல்லுநர்களைக் கொண்ட அமைப்பால் மேம்படுத்தி வரையறுக்கப்பட்ட கற்றல் கற்பித்தலில் இணைக்கப்பட வேண்டும். | 10 |
இந்த முயற்சிகளைக் கல்வி நிறுவனங்களும் பாடத்திட்ட மேம்பாட்டு மையங்களும் ஆய்வு செய்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்திடலாம். | 11 |
இணையம் வழியே கற்றல்கற்பித்தலில் வளர்ந்த நாடுகளைப் போல வளரும் நாடுகளிலும் பரீட்சார்ந்த முறையில் நடைபெற்று வருகிறதென்றாலும் இந்த தொழில்நுட்பக் கூறுகளை எந்த நிலையில் பாடத்திட்டத்தோடு இணைக்கப்படலாம் என்று ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. | 23 |
கணினி தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் மாணவர்களின் அறிவு வளர்ச்சியை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. | 10 |
மாணவனின் அடிப்படை அறிவு திறமை இவற்றின் அடிப்படையில் மாறுபட்ட பயிற்சிகளை நுட்பங்கள் மூலம் கற்றல்கற்பித்தல் நடைபெறுவதால் மாணவன் புதியக் கருத்துக்களைச் செய்திகளைப் பெறுகிறான். | 17 |
தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படும் பல இணையதளங்கள் உள்ளன. | 7 |
தமிழை முதல்மொழியாகக் கற்பதற்கும் இரண்டாம் மொழியாகக் கற்பதற்கும் இணையதளங்கள் வந்துவிட்டன. | 8 |
அதுமட்டுமல்லாது ஆங்கிலத்தின் வழியாகத் தமிழ் கற்றல் மலாய்மொழி வழியாகத் தமிழ் கற்றல் என உலகத்தின் பெருமொழிகள் பலவற்றின் வழியாகத் தமிழைப் படிப்பதற்குரிய சூழல்கள் உருவாகியுள்ளன. | 18 |
முறையாகச் செய்யப்பட்ட கலைத்திட்டங்கள் பாடங்கள் ஆகியனவற்றை இணையத்திலேயே படிப்பதன் வழியாகத் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள முடியும். | 11 |
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ்மொழிக் கற்றலுக்கு மிகச்சிறந்த முன்னோடியாகத் திகழ்வதை மறுக்க இயலாது. | 10 |
அதுபோல உலகின் பல நாடுகளில் செயல்படும் தமிழ்க் கல்விக் கழகங்கள் அல்லது கல்விக் கழகத் தமிழ் இருக்கைகள் இணையம் மூலமாகத் தமிழ்க்கல்வியை முன்னெடுத்து வருகின்றன. | 18 |
அவ்வாறான வலைத்தளங்கள் சில பின்வருமாறு கற்றல்கற்பித்தலில் ஒரு மாணவனின் கற்றல் போக்கினையும் அவனது சிந்தனைகளையும் ஒரு ஆசிரியர் பலவிதமான கோணங்களிலிருந்து ஆய்ந்து கற்றல் முறைகளை உருவாக்குவதற்கு என்று பெயர். | 21 |
என்பது ஒரு செயலைச் செய்வதற்கு மூளையின் ஒவ்வொரு சிறு சிறு தனிப்பகுதியும் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுவதாகும். | 12 |
ஒரு மாணவன் ஒரு பயிற்சியை செய்யும்போது அம்மாணவன் எளிய வழியில் எவ்வாறு மாறுபட்ட நுட்பங்களைக்கொண்டு பெறமுடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டதே தத்துவம். | 16 |
மாணவர்களின் கற்றல் சிதைவதற்கு கவனச் சிதைவும் ஒரு காரணமாகும். | 7 |
கவனம் குறையும் போது அல்லது சிதறும் போது பெறப்படும் தகவல்களை மூளையில் ஆழமாக பதிய முடியாது. | 12 |
இதனால் கவனத்தை சீர் செய்யவும் நிலை நிறுத்தவும் என்ற முறையைச் சில நாடுகள் செய்து வருகின்றன. | 12 |
இதற்குக் குறிப்பிட்ட வன்பொருட்கள் தேவை. | 4 |
கணினியோடு இணைக்கப்பட்ட ஒலிவாங்கியை தலையில் அணிந்து கொண்டு கற்றலில் ஈடுபடுவர். | 8 |
மூளையின் அலைவரிசையில் ஒலிவாங்கி பொருத்தப்பட்டுள்ள கணினிக்குத் தெரியப்படுத்தவும். | 6 |
மாணவனின் கவனம் மாறும்போது கணினியில் அந்தத் தகவல் தெரியும். | 7 |
கவனம் சிதறும் போது மாணவனே தன்னைச் சோதித்துக் கவனம் மாறாது கற்றலில் டுபட முறை துணை செய்கிறது. | 13 |
சிந்தனைத் தூண்டலை வளர்க்கும் பாடங்களைப் போதிக்கும் மென்பொருட்களை உருவாக்கி அதனை மாணவர்களுக்குக் கற்றலின் போது அளித்திட வகை செய்யும் கட்டகத்தை உருவாக்கிட வேண்டும். | 17 |
இதற்கு உலகின் கல்வித்துறையைச் சார்ந்த வல்லுநர்கள் ஒருங்கிணைந்து இந்தப் பணியைச் செய்யக் கேட்டுக் கொள்ளலாம். | 11 |
இணையத்தில் கட்டுரை மொழிப்பயிற்சி கருத்தறிதல் இலக்கியம் போன்ற பாடங்கள் தேர்வு செய்யப்பட்டு வகுப்பு வாரியாக கணினியில் எழுத்துருக்களால் பாடங்கள் அச்சிடப்பட்டு படங்களும் வண்ணங்களும் சேர்க்கப்பட்டு பல்லூடகப் பாடங்களாக வடிவமைக்கப்படும். | 21 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.